செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல, பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை என்று தலைவர் விஜய் சார்பில் அக்கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே,
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு.
அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ஆம் திகதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின் பேரில் தெரிவித்துக் கொண்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 2:28 pm
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
March 4, 2026, 1:13 pm
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
March 4, 2026, 1:03 am
இஸ்ரேல் - ஈரான் போரினால் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய 1 கோடி முட்டைகள் தேக்கம்
March 2, 2026, 6:30 am
அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
February 27, 2026, 12:52 pm
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தி மு க வில் இணைந்தார்
February 26, 2026, 3:40 pm
முன் அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: தவெகவினருக்கு கட்டுப்பாடு
February 26, 2026, 2:32 pm
திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்: கே.என்.நேரு
February 25, 2026, 5:05 pm
