நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

 களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 

மதுரை: 

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. வாடிவாசலில் இருந்து இதுவரை அவிழ்க்கப்பட்ட 86 காளைகளில், 23 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

முதலில் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டன. பின்னர் அவிழ்க்கப்பட்டு வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். இந்த வீர விளையாட்டுப் போட்டியை காண மதுரை மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் என்ற கணக்கில் களமாடி வருகின்றனர்.

28 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை மாடுகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர் மற்றும் பார்வையாளர்கள் மூவர் உட்பட மொத்தம் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset