நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கொட்டும் மழையில் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் 

சென்னை: 

தமிழகம் முழு​வதும் நேற்று இரவு புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பட்​டாசு வெடித்​தும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் புத்​தாண்​டைக் கொண்​டாடினர். கொட்டும் மழையில் மெரினா கடற்கரையில் மக்கள் கூடி நின்றனர்.

ஆங்​கிலப் புத்​தாண்​டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்​டாசு வெடித்​தும், இனிப்​பு​களை வழங்​கி​யும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் பொது​மக்​கள் உற்​சாக​மாகக் கொண்​டாடினர். அனைத்து கிறிஸ்தவ தேவால​யங்​களி​லும் புத்​தாண்டு சிறப்​புப் பிரார்த்​தனை​கள் நடை​பெற்​றன. இதையொட்​டி, மாநிலம் முழு​வதும் போலீ​ஸார் பலத்த பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டதுடன், இரவு முழு​வதும் தொடர்ந்து கண்​காணிப்​புப் பணி​களை மேற்​கொண்​டனர்.

சென்​னை​யில் மட்​டும் 19,000 போலீ​ஸார் மற்​றும் 1,500 ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மயி​லாப்​பூர், கீழ்ப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, தியாக​ராயநகர் உட்பட சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களி​லும் 425 இடங்​களில் வாகன தணிக்கை நடை​பெற்​றது. 

மாநிலத்​தின் அனைத்​துப் பகு​தி​களி​லும் இருசக்கர வாக​னப் பந்​த​யங்​களைத் தடுக்க கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. முக்​கிய கோயில்​கள், தேவால​யங்​கள், இதர வழி​பாட்​டுத் தலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. அதே​போல, தமிழகம் முழு​வதும் உள்ள கடற்​கரைப் பகு​தி​களி​லும் போலீ​ஸார் ரோந்​துப் பணி​களில் ஈடு​பட்​டனர். கடலில் இறங்​க​வும், குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. முக்​கிய இடங்​கள் ட்ரோன் கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்​கப்​பட்​டன.

அரசால் அனு​ம​திக்​கப்​பட்ட மனமகிழ் மன்​றங்​கள், ஓட்​டல்​கள், விடு​தி​களு​டன் கூடிய நட்​சத்​திர ஓட்​டல்​கள் ஆகிய இடங்​களில் புத்​தாண்​டுக் கொண்​டாட்​டங்​கள் நடை​பெற்​றன. இதற்​காக பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டிருந்​தன. 

இரவு நேரத்​தில் அனைத்து மேம்​பாலங்​களும் மூடப்​பட்​டன. வணிக வளாகங்​கள், ஓட்​டல்​கள், இனிப்​பகங்​கள், துணிக்​கடைகளில் அதிக அளவில் மக்​கள் திரண்​டனர். பொது​மக்​களைக் கவரும் வகை​யில் பல்​வேறு இடங்​களும் வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset