செய்திகள் உலகம்
அட்லாண்டாவில் போயிங் விமானம் தீப்பிடித்தது: பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்
அட்லாண்டா:
அமெரிக்க நகரமான அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது ஏறக்குறைய 200 பேர் டெல்டா விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா நிறுவனத்தின் போயிங் 757-300 விமானம் ஓடுபாதையில் புறப்பட முற்பட்டபோது விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்து சறுக்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்திலிருந்து 200 பேரும் அவசரமாக வெளியேறும் கதவின் சறுக்கி ஊடாக வெளியேற்றப்பட்டனர்.
நான்கு பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஏனையவர்களுக்கு சம்பவ இடத்தில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
போயிங் 757-300 இன்ஜின் பிரச்சனை இருந்தது. இந்த சம்பவம் தற்போது விசாரணையில் உள்ளது.
எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை.
இந்த அனுபவத்திற்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 2:19 pm
இயற்கைக்கு நன்றி சொல்லும் நேரம்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
January 13, 2025, 5:43 pm
ஹஜ் யாத்திரை -2025: இலங்கை, சவூதி நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையொப்பமானது
January 13, 2025, 11:21 am
முதல் விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் New Glenn உந்துகணை
January 13, 2025, 10:58 am
எங்கு பார்த்தாலும் சாம்பல்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் 16 பேர் மரணம்
January 13, 2025, 10:18 am
கனடா பிரதமர் போட்டியிலிருந்து அனிதா ஆனந்த் விலகல்
January 12, 2025, 8:28 pm
இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு
January 12, 2025, 12:33 pm
விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை
January 12, 2025, 11:04 am
29 ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது
January 12, 2025, 11:02 am