நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கார் பந்தயப் தொடர் முடியும் வரை எந்தவொரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாக மாட்டேன்: நடிகர் அஜித்குமார் அதிரடி 

சென்னை: 

நடிகர் அஜித்குமார் தற்போது கார் பந்தய தொடரில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இந்த கார் பந்தய தொடர் முடியும் வரையில் தான் எந்தவொரு திரைப்படங்களிலும் ஒப்பந்தமாக மாட்டேன் என்று அவர் அதிரடியாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் 

நடிகர் அஜித்குமார் தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24H DUBAI போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் அவரின் அணியான அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டுள்ளது 

அக்டோபர் மற்றும் மார்ச் மாத இடைவெளியின் போது தாம் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாவேன் என்றும் தெளிவாக கூறியுள்ளார். 

நடிகர் அஜித்குமாருடன் இணைந்து மெத்தியு டெட்ரி, ஃபெபியன், கெமரூன் மெக்லியோட் ஆகியோர் அவரின் குழுவில் இணைந்துள்ளனர். 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இரு திரைப்படங்கள் இவ்வாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் வேளையில் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி திரைப்படமும் வெளியாகவுள்ளது 

பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாது என்று லைக்கா நிறுவனம் அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளையும் ஒருசேர தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset