நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்: மனதை வருடிய காந்தக்குரல் நம்மை விட்டுப் பிரிந்தது

திருச்சூர்: 

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80 ஆகும்.

கேரளா மாநிலத்தின் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் 

தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன். 80,90 களில் பாடகர் ஜெயசந்திரன் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். 

தமிழில் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்களைப் பாடியுள்ளார். 

வசந்தகால நதியினிலே, காத்திருந்து காத்திருந்து, அந்திநேர தென்றல் காற்று, ராசாத்தி உன்னே ஆகிய பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். 

இவர் தமிழ், மலையாளாம், கன்னடம் என பல மொழிகளில் சுமார் 16,000 பாடல்களைப் பாடியுள்ளார். 

அந்த காந்தக்குரலுக்குச் சொந்தமான பாடகர் ஜெயசந்திரன் நம்மை விட்டு விண்ணுலகிற்கு விடைப்பெற்றார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset