செய்திகள் கலைகள்
அஜீத்தின் பந்தய கார் 180 கி.மீ. வேகத்தில் விபத்து: உயிர் தப்பினார்
புது டெல்லி:
துபாயில் கார் பந்தயத்துக்கான பயிற்சியின்போது 180 கி.மீ. வேகத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜீத்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் வரும் 11, 12ஆகிய தேதிகளில் கார் பந்தயம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்கான அஜீத்குமார் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 180 கி.மீ. வேகத்தில் செல்லுபோது வளைவில் எதிர்பாராதவிதமாக, அஜீ்த்தின் கார் தடுப்பில் வேகமாக மோதியதில் சுழல் அடித்து நின்றது. இதில் முன்பகுதி நொறுங்கியது.
விபத்துக்குள்ளான காரில் இருந்து காயமின்றி அஜீத்குமார் வெளியேறும் காட்சிகள் அஜீத்குமார் ரேஸிங் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், உடனடியாக மாற்று கார் இல்லாததால் பந்தயத்தில் அஜீத்குமார் பங்கேற்பது சந்தேகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 1:03 pm
விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை: சவாலான கதாபாத்திரங்களைத் தேடும் நடிகர் இர்ஃபான் ஜைனி
April 19, 2026, 8:24 pm
மோசடி வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்
April 18, 2026, 4:05 pm
விக்கல்ஸ் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’
April 17, 2026, 10:31 am
திரையில் மீண்டும் தர்மா ஹாரூன்
April 9, 2026, 4:42 pm
ஆர்யாவின் தன் 40-வது திரைப்படத்தில் இரு நாயகிகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
