செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் போட்டியை காண மங்கோலியாவில் இருந்து பிரிட்டனுக்கு சைக்கிளில் பயணித்த கால்பந்து ரசிகர்
லண்டன்:
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த போட்டிகளை காண வரும் ஆதரவாளர்கள் தங்களது அணிகளையும், நட்சத்திர வீரர்களையும் ஆதரிக்கும் விதமாக மைதான கேலரிகளில் பாடல்கள், கோஷங்களுடன் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
போட்டி இல்லாத நாட்களில் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரிமியர் லீக் குறித்தும், கிளப்கள் இடையிலான வீரர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான மென்செஸ்டர் யுனைடெட்டின் ரசிகர் ஒருவர் ஓல்ட் டிராப்போர்டில் தனக்கு பிடித்த அணியின் விளையாட்டைக் காண மங்கோலியாவில் இருந்து பிரிட்டனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் மங்கோலியாவின் தலைநகரான உலான்பாதர் நகரில் இருந்து சைக்களில் புறப்பட்ட ஒச்சிர்வானி பேட்போல்ட் என்ற ரசிகர் சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து ஓல்டு டிராபோர்டு நகரை சில தினங்களுக்கு முன்னர் அடைந்தார்.
தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி அங்கு நடைபெற்ற மென்செஸ்டர் யுனைடெட், நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் இடையிலான போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 8:36 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 5, 2025, 8:33 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 4, 2025, 9:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 3, 2025, 9:29 pm
சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு சுருண்டது
January 3, 2025, 8:47 pm
குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
January 3, 2025, 12:05 pm
இத்தாலி சூப்பர் கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி
January 3, 2025, 11:54 am
மனிதக் கடத்தலுக்கு எதிர்ப்பு விழிப்புணர்வு: 10 கிலோமீட்டர் ஓடவிருக்கிறார் பிஎஸ். ரஞ்சன்
January 2, 2025, 8:32 am
பளபளப்பை இழந்த பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
January 2, 2025, 8:29 am