நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நார்வே பேருந்து விபத்தில் மலேசியப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் 

ஒஸ்லோ:

நார்வேவில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் கொல்லப்பட்ட நிலையில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்தில் பாதிகப்பட்ட 58 பேரில் மலேசியப் பயணிகளும் அடங்குவர். 

சீனா, பிரான்ஸ், இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, சிங்கப்பூர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இப்பேருந்தில் பயணம் செய்துள்ளனர். 

வெளியேற்றப்பட்ட பயணிகளில் சிலர் உள்ளூர் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், மூன்று பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வானிலை மோசமாக உள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் சிக்கலாக்குகிறது என்று போலீசார் அறிக்கையில் தெரிவித்தனர்.

தற்போது அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset