நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படவில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படவில்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

திட்டமிட்டு செயல்படுத்தப்படும் ஒவ்வொரு முயற்சியிலும் தூணாக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதை மடானி அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் மதனி அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், நகரங்கள், கிராமங்கள் என எந்த மக்களையும் ஓரங்கட்டாமல் இருக்க அரசு துல்லியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு முயற்சியும் மக்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள, கண்ணியமான வாழ்க்கையை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

குறிப்பாக நாட்டிற்கும் மக்களுக்கும்  சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மடானி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset