நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தக்சினுடன் பொருளாதாரம், தொழில்நுட்பம், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது: பிரதமர்

லங்காவி:

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுடனான சந்திப்பில் பொருளாதாரம், தொழில்நுட்பம், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முகநூல் பதிவில் இதனை கூறினார்.

ஆசியான் தலைவர் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுக்கு முறைசாரா ஆலோசகராக செயல்படும் தக்சினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

எங்கள் உரையாடல் முக்கியமான பிராந்திய முன்னுரிமைகளை மையமாகக் கொண்டிருந்தது.

பொருளாதாரங்களை புத்துயிர் பெறுதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், தெற்கு தாய்லாந்தில் அமைதியை வளர்ப்பது மியான்மர் நெருக்கடியை நிவர்த்தி செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்று அப்பதிவில் பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset