நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் இருண்ட பகுதிகளில் விளக்குகள் நிறுவப்பட வேண்டும்: டாக்டர் அக்மால்

அலோர்காஜா:

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் இருண்ட பகுதிகளில் விளக்குகள் நிறுவப்பட வேண்டும்.

அம்னோ இளைஞர் பகுதி தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே இதனை வலியுறுத்தினார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் விபத்துக்களுக்கு இருண்ட பகுதிகளும் ஒரு காரணம்.

பிளஸ் நெடுஞ்சாலையில் இருண்ட பகுதியில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி  7 பேர் மரணமடைந்த சோகம் நடப்பது முதல் முறையல்ல.

நெடுஞ்சாலையின் நிலை மிகவும் இருட்டாக இருக்கும்போது, ​​​​விளக்குகளே இல்லை என்பது  அதற்கு முக்கிய காரணமாகும்.

ஆகவே மலேசிய அரசாங்கம், மலேசிய நெடுஞ்சாலை ஆணையம், பிளஸ் நிறுவனம் ஆகியவை தயவு செய்து இருண்ட நெடுஞ்சாலை விவகாரத்தை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக அப்பகுதிகளில் விளக்குகள் நிறுவப்பட வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset