நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்; மற்றவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை: சத்தியா உருக்கம்

கோலாலம்பூர்:

மடானி கலைத்துறை உதவிகள் எனது மருத்துவ சிகிச்சை செலவுக்கான சுமையை குறைக்கும்.

நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் சத்தியா இதனை கூறினார்.

60 வயதான சத்தியா கடந்த மாதம் இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தகவல் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங், சத்தியாவை சந்தித்துடன் ஃபினாஸின் மடானி கலைத்துறை உதவித் திட்டத்தின் வாயிலாக உதவிகளை வழங்கினார்.

உதவிகளை பெற்றுக் கொண்ட சத்தியா கூறியதாவது,

இப்போது வாரத்திற்கு மூன்று முறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் 200 ரிங்கிட் செலவாகிறது.

இன்றைய உதவி எனது சிகிச்சைச் செலவுகளின் சுமையைக் குறைக்க உதவும்.

ஆகவே தகவல் தொடர்பு அமைச்சு, ஃபினாஸ் குறிப்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எனது நன்றிகள் என்று சத்தியா கூறினார்.

மேலும் இந்த உதவி முழுமை பெறவில்லை என்றாலும், இன்று தனது வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

அவ்வளவுதான். நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்.

மற்றவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று அவர் உருக்கமாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset