நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கு தெக்குனில் கூடுதல் நிதியை பெறுவதற்கான முயற்சியில் டத்தோஶ்ரீ ரமணன் ஈடுப்பட்டுள்ளார்: டத்தோ அன்புமணி

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்திற்கு தெக்குனில் கூடுதல் நிதியை பெறுவதற்கான முயற்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஈடுப்பட்டுள்ளார்.

அவரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன்  இதனை கூறினார்.

இவ்வாண்டு தெக்குன் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

ஆனால் டத்தோஶ்ரீ ரமணின் முயற்சியால் தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் வாயிலாக மேலும் 30 மில்லிய ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

மொத்தமாக ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரிங்கிட்டும் தற்போது முடிவும் தருவாயிலில் உள்ளது.

இதன் வாயிலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வணிகர்கள் பயடைந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் தெக்குனில் 30 மில்லியன் ரிங்கிட்டை இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கினார்.

இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டும் அடிப்படையில் டத்தோஶ்ரீ    ரமணன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய வணிகர்கள் சாதிக்க வேண்டும். சமுதாய மக்கள் பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்பதெ அவரின் இலக்காக உள்ளது.

ஆக அடுத்தாண்டும் அவர் இந்த நிதி அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்புகளை செய்வார்.

துணையமைச்சரின் சார்பில் இரு வணிகர்களுக்கு தெக்குன் காசோலைகளை எடுத்து வழங்கிய டத்தோ அன்புமணி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset