நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் சிறையில் இருந்தபோது என் மகனுக்கு மன்மோகன் சிங் கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கினார்: பிரதமர்

கோலாலம்பூர்:

நான் சிறையில் இருந்தபோது என் மகனுக்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

உடல் நலக்குறைவால் மரணமடைந்த மன்மோகன் சிங் மிகவும் அன்பான நண்பர். 

நவீன இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக விளங்குகிறார்.

மிகவும் மரியாதைக்குரிய, அன்புக்குரிய நண்பரான  மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படும் மன்மோகன், 

பிரதமராவதற்கு முன்பு நிதியமைச்சராகப் பணியாற்றி  இந்தியாவை உலகப் பொருளாதார சக்தியாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றினார்.

1990களில் இருவரும் நிதியமைச்சராக பணியாற்றிய போது அவருடனான தனிப்பட்ட உறவை கொண்ருந்தேன்.

அதேவேளையில் நான் சிறையில் இருந்த போது என் மகனுக்கு அவர் கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கினார்.

அந்த நல்ல வாய்ப்பை நான் நிராகரித்தாலும் அத்தகைய ஆளுமை நிச்சயமாக அவரது அசாதாரண மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இந்த விவகாரம் பலருக்கு தெரியாது. ஆனால் அதை மலேசியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset