நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழகத்தில் பூனை கொல்லப்பட்ட விவகாரம்: விரிவுரையாளர் உட்பட 7 மாணவர்களிடம் விசாரணை

கோலாலம்பூர்:

மலாயா பல்கலைக்கழகத்தில் பூனைகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட 7 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகல் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா கூறினார்.

இந்த விசாரணையில் ஒரு விலங்கு உரிமை ஆர்வலரும் அடங்குவார்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் இறந்து போன பூனையைத் தொடர்ந்து  25-ஆம் தேதி அப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அறிவியல் புலத்தின் வாகன நிறுத்துமிடத்தில் மற்றொரு பூனையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், சம்மந்தப்பட்ட பூனைகளின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பூனைகள் மீதான காயங்கள் தெரு நாய்கள் கடித்தது போல் இருப்பதால் இந்த வழக்கு கால்நடைத் துறைக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset