நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலத் திட்டங்களுக்காக 3.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ  ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மக்களின் வசதி, பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் பராமரிப்பதற்கு 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களின் சுமையைக் குறைக்கவும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்  357,834 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்,  தீ விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 263,550 ரிங்கிட் விநியோகிக்கப்பட்டது.

உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவு பொருட்கள், உளவியல் ஆதரவு, குடியிருப்பு சீரமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

புதுமையான பாடத்திட்டத்தின் அறிமுகம், தொழில்முறை ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்பித்தல், கற்றலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற கல்வித் திட்டங்களுக்கு 107,390 ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது.

180 அரசு சாரா இயக்கங்களுக்கு 957,637 ரிங்கிட்  வழங்கப்பட்டது.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் இது பயன்பட்டது.

வழிபாட்டு இல்லங்களான பள்ளிவாசல், சூராவ், ஆலயங்கள், தேவாலயங்களுக்கு 140,509 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

மேலும் 2024 ஆம் ஆண்டு  நிறைவு பெறும் தறுவாயில் பல்வேறு முயற்சிகளை வெற்றியடையச் செய்ய ஒத்துழைத்த சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset