நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வீடுகள் வாங்கும் சிங்கப்பூர் மக்கள் சட்டப் பிரச்சினை எதிர்நோக்குகின்றனர்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் தனியார் வீடு வாங்கும் திட்டத்தின் (99 ஆன்டுகள்) கீழ் வீடுகள் வாங்கும் சிங்கப்பூர் மக்கள் அச்சொத்துக்கள் தொடர்பான சட்ட  சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்த திட்டத்தில் வீடு வாங்குபவர்களுக்கு முழு உரிமையைத் தராமல் அதற்குப் பதிலாக 99 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு வழங்குகிறது.

மேலும் வீடு வாங்குபவர்கள் தாங்கள் உரிமையாளர்களைக் காட்டிலும் நீண்ட கால குத்தகைதாரர்களாக கருதப்படும் வகையில் பல விமர்சனங்களை இந்தத் திட்டம் எதிர்கொண்டது. 

இந்தத் திட்டத்தில் குறைந்தது 170 பேர் வீடு வாங்குபவர்கள் தங்கள் வருத்தங்களைப் பகிர்வதற்காக ஒரு புலனை குழுவில் இணைந்திருப்பதை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. 

சிலர் வார இறுதியில் இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்குதல் அல்லது முதலீடுகளுக்கு S $275,000 (907,280 ரிங்கிட்) வரை செலவிட்டனர்.

வீடு வாங்கும் சிங்கப்பூர் மக்கள் மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தங்கள் ஜொகூர் அடுக்குமாடி கொள்முதல் விதிமுறைகளைச் சரியாக வெளியிடத் தவறிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் 80க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் வீடு வாங்கியவர்கள் ஒரு மலேசிய முதலீட்டு நிறுவனத்தின் மீதும்  எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

மேலும், 70 பேர் சிங்கப்பூரில் சொத்துக்களைச் சந்தைப்படுத்திய மேம்பாட்டு  நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் அளித்தனர்.

வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், இந்தத் தனியார் வீடு வாங்கும் திட்டத்தைச் சர்வதேச சொத்து கட்டமைப்புகளுடன் இணைக்கவும் விரிவான சட்ட சீர்திருத்தங்களை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset