நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை இரும்பு தடுப்பு சுவரை மோதி சாலை விபத்து: 2 பல்கலைக்கழக மாணவிகள் பலி 

பெட்டாலிங் ஜெயா: 

நெடுஞ்சாலை இரும்பு தடுப்பு சுவரை மோதி சாலை விபத்து ஏற்பட்டதில் இரு UTEM பல்கலைக்கழக மாணவிகள் பலியாயினர். 

இந்த சாலை விபத்து இன்று அதிகாலை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 187.6இல் நிகழ்ந்தது 

காலை 6.30க்கு இந்த விபத்து ஏற்பட்டது. மைவி ரக காரில் நான்கு பெண்கள் பயணத்தில் இருந்ததாக ஜாசின் மாவட்ட காவல்துறை தலைவர் அஹ்மத் ஜமில் ரட்ஸி கூறினார் 

அவர்கள் முறையே 19 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாவர். விபத்து ஏற்பட்டதில் இடது புறத்தில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இரு பெண்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தனர் என்று அவர் குறிப்பிட்டார். 

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1)இன் கீழ் இந்த விபத்து விசாரிக்கப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மேலும் இரு பெண்கள் தீயணைப்பு மீட்புப்படையினரால் மீட்கப்பட்டனர். 

மரணமடைந்த இரு உடல்களும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset