நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவிக்காக கட்சி தாவ வேண்டாம்: ஸப்ருலுக்கு வான் சைபுல் அறிவுறுத்து

கோலாலம்பூர்:

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருல் பதவிகளை தற்காப்பதற்காகக் கட்சி தாவக் கூடாது.

பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் இதனை அறிவுறுத்தினார்.

தெளிவான போராட்ட அடிப்படையின்றி ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது தெங்கு ஸப்ருலின் அரசியல் அடையாளத்தை பாதிக்கும்.

மேலும் அவர் சுயநலவாதி என்ற குற்றச்சாட்டுகளை கொண்டு வரும்.

ஸப்ருலின் அரசியல் பயணம் பெர்சத்து கட்சியில் தொடங்கியது. ஆனால் பின்னர் அம்னோவிற்கு அவர் மாறினார்.

இப்போது கெஅடிலான் கட்சிக்கு மாறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கெஅடிலானுக்கு அவர் மாறுவது குறித்த வதந்திகளை அவர் மறுக்கவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசியல் உலகில், ஒரு கட்சியின் போராட்டத்தில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

எப்போதும் பதவிக்காக கட்சித் தாவக்கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset