நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயா பல்கலைகழகத்தில் மீண்டும் நாய், பூனைகள் கொல்லப்பட்டன

கோலாலம்பூர்:

மலாயா பல்கலைகழகத்தில் மீண்டும் நாய், பூனைகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

மலாயா பல்கலைக்கழகத்தின் நியூஜென் மாணவர் குழுவினர் இதனை கூறினார்.

இந்த நான்காவது சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் மலாயா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மையத்தில் நிகழ்ந்தது.

மலாயா பல்கலைகக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகையால் இந்த விவகாரத்திற்கு போலிஸ்படையும் மலாயா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் பலமுறை புகார்கள்  அளித்துள்ளதாக அக்குழு கூறியது.

எனினும், இது வரை, விசாரணையில் அல்லது சந்தேக நபரைக் கைது செய்வதில் எந்த வளர்ச்சியும் இல்லை.

இதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதில் போலிஸ், பல்கலைக்கழக நிர்வாகம்  தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அக்குழு வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset