
செய்திகள் உலகம்
சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த ஆடவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 33 வயது ஆடவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
நேற்று (12 டிசம்பர்) அதிகாலை 2.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் நடந்த சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது.
துணைக் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் சிகரெட் தருமாறு கேட்டபோது அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆடவர் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவதற்கு முன்னர், ஆடவர் அறையிலிருந்த திரைச்சீலையை அகற்றி அதற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தமது கோரிக்கை ஏற்கப்படவில்லையென்றால் தீயைப் பரவச்செய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.
தீயை விமான நிலையக் காவல்துறை அணைத்தது.
தீயை அணைக்கும் பணியின்போது அதிகாரிகளின் மீது ஆடவர் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை சொன்னது.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 7 ஆண்டு் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
June 11, 2025, 8:24 pm
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
June 11, 2025, 11:30 am