நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

"சசிகலாவின் கண்ணீர் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்”: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை:

அதிமுக கொடியுடன் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று கண்ணீருடன் மரியாதை செலுத்திய சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை (அக். 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற அதேநேரத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அதில் ஒருவர்தான் சசிகலா. அப்படியிருக்கையில் யானை பலம் கொண்ட அதிமுகவை, கொசு தாங்குவதாக சொல்வது நகைச்சுவையாக உள்ளது. சசிகலாவின் நடிப்புக்கு, ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். அதிமுகவில் சசிகலாவுக்கு நிச்சயம் இடமில்லை. அமமுக-வில் இடமிருந்தால், அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை” எனக்கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset