செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும். இன்று (டிச.12) அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (டிச.13) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:38 pm
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு புதிய திட்டம்: இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்
January 17, 2025, 4:17 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
January 17, 2025, 11:55 am
காணும் பொங்கலில் சுற்றுலா தலங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
January 16, 2025, 9:51 pm
தமிழ் பாரம்பரிய மாதம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am