நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய SOPக்கள்: லங்காவி மேம்பாட்டு ஆணையம் தகவல்

லங்காவி:

லங்காவிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான SOPக்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாக லங்காவி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பு சுகாதார அமைச்சும், தேசிய பாதுகாப்பு மன்றமும் விரிவாக ஆராயும் என அந்த ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரி நஸாருடின் அப்துல் முத்தலிப் (Nasaruddin Abdul Muttalib) கூறியுள்ளார்.

"வெளிநாட்டுப் பயணிகள் லங்காவிக்கான விமானப் பயணத்துக்கு சுமார் 72 மணி நேரத்துக்கு முன்பாக RT-PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். லங்காவி வந்தடைந்ததும், நேராக தங்குவிடுதிக்குச் செல்ல வேண்டும்.  அங்கும் அவர்களுக்கு RT-PCR பரிசோதனை நடத்தப்படும்.

"விமான நிலையத்தில் தேவையற்ற நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு. பரிசோதனையின்போது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தங்குவிடுதியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

TERKINI] SOP Gelembung Pelancongan Ke Pulau Langkawi Bermula 16 September

"லங்காவியில் மூன்று நாள்களுக்கும் மேல் தங்கியிருந்தால் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லவும் வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்," என்றார் நஸாருடின் அப்துல் முத்தலிப்.

அக்டோபர் மாத இறுதிக்குள் லங்காவிக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி சுற்றுலா நடவடிக்கைகளுக்காக லங்காவி திறக்கப்பட்டதும், இரு வாரங்களுக்குள் 38,784 பேர் வந்து சென்றதாக தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் 60 ஆயிரம் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்மாத மத்தியிலேயே 51,400 பேர் வருகை தந்துள்ளனர் என்றும், லங்காவி மறு திறப்பு நடவடிக்கை முழுமையாக வெற்றி அடைந்துள்ளது என்றும் நஸாருடின் அப்துல் முத்தலிப் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset