நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: அன்வார்

கோலாலம்பூர்:

அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பக்காத்தான் ஹரப்பானுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அரசாங்கம் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.

பக்காத்தானின் ஆதரவு வேண்டும் எனில் அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அரசாங்கத்துக்கான ஆதரவு குறித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் உத்தரவாதம் அளிக்க இயலாது என்று அன்வார் சுட்டிக்காட்டி உள்ளார்.

"புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் நாடு பல நன்மைகளை அடைந்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற சீர்திருத்தங்கள், Undi-18 ஆகியவற்றை  அமல்படுத்துவது ஆகியவை சாத்தியமாகும். எனினும், இவையெல்லாம் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

"இதே வேளையில் சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாக, கட்சித்தாவல் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், மலாக்கா விவகாரத்தையும் பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தையும் கையாண்ட விதத்தைக் குறிப்பிடலாம்.

"இது சீர்திருத்தப்பட்ட அரசாங்கத்துக்கான செயல்பாடு அல்ல. இந்த அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை," என்றார் அன்வார் இப்ராஹிம்.

சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நடப்பு அரசாங்கம் போதிய வேகத்தைக் காட்டவில்லை என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என ஏற்கெனவே அன்வார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது மீண்டும் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset