நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

போதைப் பொருள் வழக்கு: பிரபல ஹிந்தி நடிகருக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை:

கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து இந்த சோதனை அதிகரித்து வருகிறது. சோதனையை அடுத்து சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு போலீசார், பிரபல இந்தி நடிகர் அர்மான் கோலியை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இவர், இந்திப் பட இயக்குநர் ராஜ் குமார் கோலியின் மகன் ஆவார்.

ஏராளமான படங்களில் நடித்துள்ள அவருடைய, வீட்டில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில், தடைசெய்யப் பட்ட போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை பறிமுதல் செய்த போலீசார், நடிகர் அர்மான் கோலியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கான சிறப்பு நீதிமறத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset