நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துபாய் எக்ஸ்போ 2020 மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: பிரதமர் தகவல்

புத்ராஜெயா:

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 (Expo 2020) மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மலேசியா கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்றும் 14 மலேசிய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஓமன், கட்டார், இங்கிலாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா ஆகியவையே அந்த வெளிநாடுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் எக்ஸ்போ 2020 மூலம் எட்டு முதல் பத்து பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இரண்டு வாரங்களிலேயே மலேசியா இந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Dubai Expo 2020 attempt to shield UAE rights abuses, says HRW | Human  Rights News | Al Jazeera

அடுத்த 25 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், பல்வேறு அமைச்சுகள், முகமைகள் மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு அந்த இலக்கை கடக்க முடியும் எனும் நம்பிக்கை உள்ளதாகவும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

மேலும், எண்ணெய், எரிவாயு, உயிரி தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset