நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை வரை நாட்டிலுள்ள எட்டு மாநிலங்களில் கனமழை தொடரும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்:

கிளாந்தான், திரெங்கானு, பேராக், பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜொகூர் ஆகிய எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது 

கிளாந்தான் மாநிலத்தில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மச்சாங் ஆகிய பகுதிகளில் அபாயகரமான அளவில் மிக கனமழை பெய்யும். 

திரெங்கானுவில் உள்ள கோல கெராய் பகுதிகளிலும் பேராக் மாநிலத்தின் உலு பேராக் மாவட்டங்களிலும் பகாங் மாநிலத்தின் பெக்கான், ஜெராண்டுட், ரொம்பின் ஆகிய பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset