நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலவச குடிநீர் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு தயார்: அமிருடின் ஷாரி

ஷா ஆலம்:

டாருல் ஏஹ்சான்  இலவசக் குடிநீர்த் திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அத்திட்ட நிபந்தனைகளை  மறு ஆய்வு செய்வது உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலிக்க சிலாங்கூர் மாநில அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். 

தற்போது 5,000 வெள்ளியாக  உள்ள  குடும்ப வருமான வரம்பை உயர்த்துவதும் பரிசீலிக்கப்படும் பரிந்துரைகளில்  ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலவச குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி  வருகிறோம். ஆயினும் பொது மக்களின்  கருத்துக்களை ஏற்க தயாராக இருக்கிறோம். ஒருவேளை  உதவி பெறுவோரின் வருமான வரம்பை  நாம் உயர்த்தலாம்.

இப்போது இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான  நிபந்தனை 5,000 வெள்ளியாகும்.வெ 7,000 முதல் வெ.8,000 வரை வருமான வரம்பு  அதிகரிக்கலாம். அதை நாங்கள் அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் போது தெரிவிப்போம்   என்றார் அவர்.

சிலாங்கூரில் 319,000 குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும்  இலவச குடிநீய் திட்டத்தின் பலனை  அனுபவிப்பதாகவும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்திற்காக 20,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.

தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இலவச தண்ணீர் திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பதிவைத் திறந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset