நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

40 ஆண்டுகளாக சுற்றுவளைப்பு வழியின் நடுவில் வசித்து வரும் குடும்பம்: லண்டனில் ஆச்சிரியம்

லண்டன்: 

பிரிட்டனின் டென்பிக்‌ஷிர் பகுதியில் ஒரு குடும்பம் கடந்த 40 வருடங்களாக ROUNDABOUT எனப்படும் சுற்றுவளைப்பு வழியின் நடுவே வசித்து வருகின்றனர். 

அவர்களின் வீடு சுற்றுவளைப்பு வழியின் நடுவே அமைந்துள்ளதால் அங்கு வசிப்பவர்களுக்கு வாகனங்களின் சத்தம் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக 65 வயதான கிளைட் ஹொவாட்சன் கூறினார். 

சுற்றுவளைப்பு வழி அங்கு கட்டுப்படுவதற்கு முன்னாள் தனது வீடு அங்கு இருந்ததாகவும் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அங்கு இருப்பதால் தான் குடும்பத்துடன் வசிப்பதாக அவர் சொன்னார். 

இந்த சுற்றுவளைப்பு வழி சாலை கடந்த 1980ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்லாமல் இருந்ததால் அந்த வீடு நடுவே அமையப்பட்டது 

மதிய வேளையில் இந்த சுற்றுவளைப்பு வழி சாலை போக்குவரத்துக்கு அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset