நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது

லண்டன்: 

இங்கிலாந்தைச் சேர்ந்த கார் நிறுவனமான ஜாகுவார், புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது. 

முற்றிலும் மின்சார கார் தயாரிப்பாளராக 2026ம் ஆண்டில் மாறுவதற்கான புதிய சந்தைப்படுத்தல் உத்தி இது என்றும் தெரிவித்துள்ளது.

மியாமியில் டிசம்பரில் நடைபெறவுள்ள கண்காட்சியில், தன் புதிய கார் மாடலை காட்சிப்படுத்த இருப்பதாகவும் ஜாகுவார் கூறியுள்ளது. 

புதிய லோகோ மற்றும் வீடியோவை ஜாகுவார் வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அதற்கு எதிர்மறையான கருத்துகள் அதிகம் வெளியாகின. முன்பிருந்த லோகோவுக்கே திரும்புமாறு பலரும் பதிவிட்டனர்.

டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், நீங்கள் கார் தான் விற்கிறீர்களா என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset