நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக கேரம் சான்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை காசிமா 3 தங்கம் வென்றார்

சென்னை:

6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார்.

வரும் 21-ம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா தமிழகம் திரும்புகிறார்.

காசிமாவின் தந்தை மஹபூப்பாஷா. இவர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
உலக காரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள வீராங்கனை காசிமாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

இவருக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1.50 லட்சம் உதவி செய்திருந்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset