செய்திகள் விளையாட்டு
தோற்றாலும் எனக்கு இது வெற்றியே: மைக் டைசன்
வாஷிங்டன்:
பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை வீரருமான ஜேக் பாலுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மௌனம் கலைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இந்தப் போட்டியில் தாம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றதாகவே நினைப்பதாகச் சொன்னார்.
அப்படி ஒரு சூழலில்தான் நான் இருக்கின்றேன். குத்துச்சண்டை போட்டியில் நான் கலந்துகொண்டதற்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
நான் குத்துச்சண்டை களத்திற்கு கடைசியாக திரும்பியதை நினைத்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.
உடல்நலப் பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் தாம் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றதாக அவர் பகிர்ந்தார்.
கடந்த ஜூன் மாதம் நான் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன். எனக்கு எட்டு முறை ரத்தம் ஏற்றப்பட்டது. என் பாதி ரத்தத்தை நான் இழந்தேன்.
அது மட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்தபோது 11 கிலோ வரை உடல் எடையை இழந்தேன்.
இப்படிப்பட்ட நிலையிலிருந்து மீண்டும் உடல்நலம் தேறி குத்துச்சண்டை போட்டியில் நான் பங்கேற்று இருக்கிறேன்.
இதை நான் வெற்றியாகவே கருதுகின்றேன் என்றார் டைசன்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 9:04 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 17, 2024, 9:00 am
குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி: ஜேக்பால் வெற்றி
November 17, 2024, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி அபாரம்
November 16, 2024, 1:46 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன: அன்பானந்தன்
November 16, 2024, 11:08 am
19 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை; ஜேக் பாலை திடீரென கன்னத்தில் அறைந்த மைக் டைசன்
November 16, 2024, 9:36 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2024, 2:56 pm
உலகத் தமிழ் வர்த்தகர்களிடையே ஒற்றுமை மிக அவசியம்: குணராஜ்
November 15, 2024, 9:28 am
கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்?: நிர்வாகி விளக்கம்
November 15, 2024, 9:23 am