நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன: அன்பானந்தன்

கோலாலம்பூர்:

மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

அதன் தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.

மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தினர் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இப் போட்டி வரும் டிசம்பர் மாதம் 7,8 ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீபா ஏற்பாட்டில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

ஆண்கள் பிரிவில் 40 மாநில தமிழ்ப்பள்ளி குழுக்களும் பெண் பிரிவில் 40 குழுக்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறது.

மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு டத்தோ என்.எஸ். மணியம் கிண்ணம் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் வழங்கப்படும்.

குறிப்பாக இவ்வாண்டு பாலர் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியும் நடத்தப்படவுள்ளது.

இரண்டு தினங்களில் நடக்கும் இந்த போட்டி சாதனை படைக்கும் என்று அவர் சொன்னார்.

மூன்று லட்சம் வெள்ளி செலவில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

சுமார் 6,000 பேர் இந்த போட்டியைக் காண படையெடுப்பார்கள் என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் மீபா உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர்கள் ஸ்ரீ சங்கர், ஜலானி, ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset