நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழகத்தில் கோ. சாரங்கபாணி அறக்கட்டளை: டான்ஸ்ரீ குமரன்

கோலாலம்பூர்:

தமிழவேள் கோ. சா. அறவாரியத்தின் பெரு முயற்சியின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் கோ. சாரங்கபாணி அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கோ. சா அறவாரியத் தலைவர் டான்ஸ்ரீ குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த அறக்கட்டளைக்குரிய நிதி பொது மக்களிடமிருந்து  திரட்டப்பட்டுள்ளது. 3 லட்சம் வெள்ளி மலாயா பல்கலைக்கழக கலைப்புல தலைவர் பேராசிரியர் டேனி வொங் அவர்களிடம் அக்டோபர் 14 ஆம் தேதி  ஒப்படைக்கப்பட உள்ளது. 

கலை அறிவியல் புலனத்தின் இந்திய ஆய்வியல் துறையின் கண்காணிப்பில் ஆய்வுப் பணிக்காக இந்த அறக்கட்டளை இருக்கும். இதன்வழி இந்தியர்களைப் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இந்த அறக்கட்டளைக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த மேனாள் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இலக்கு 5 அறக்கட்டளைகளை மலாயாப் பல்கலைக் கழகத்தில் அமைப்பதாகும். இதற்கான தொடர் முயற்சிகளில் கோ, சா அறவாரியம் இறங்கியுள்ளது, இதற்கு கரம் நீட்டி உதவி செய்யும் கொடை நெஞ்சர்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம், இறைவன் அருளால் அதனை விரைவில் நிறைவேற்றுவோம். அதன் முதல் படியாக இந்த துவக்கம் அமையும் என்று அறவாரியத் தலைவர்  டான்ஸ்ரீ குமரன் நம்பிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கலைப்புலத்தின் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும் டான்ஸ்ரீ குமரன் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset