நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்?: நிர்வாகி விளக்கம்

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிளையன் எம்பாப்பே அணியில் விளையாடாமல் இருப்பதற்கான காரணத்தை அதன் மேலாளர் கூறியுள்ளார்.

பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கிளையன் எம்பாப்பே இதுவரை 339 கோல்களை அடித்துள்ளார். 160 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

தற்போது ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்பே விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளில் கோல்கள் அடிக்க தடுமாறி வருகிறார். 

அணியில் வினிசியஸ் ஜூனியர் சிறப்பாக விளையாடுவதாலும் புதிய அணி என்பதாலும் தடுமாறி வருவதாக கால்பந்து வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரான்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கிளையன் எம்பாப்பேக்கும் அணியின் நிர்வாகி தேஷாம்ஸுக்கும் இடையே கருத்து மோதல் எனக் கூறப்பட்ட வந்த நிலையில் எம்பாப்வே இல்லாமால் பிரான்ஸ் அணி தகுதிச் சுற்று போட்டிகளை விளையாடி வருகிறது என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் எம்பாப்பே பங்கேற்காதது குறித்து அணியின் நிர்வாகி கூறியதாவது:

நான் பலமுறை இது குறித்து எம்பாப்பேவுடன் பேசிவிட்டேன். நன்றாக சிந்தித்து இந்த முடிவினை எடுத்தேன். நான் இதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை. 

மக்கள் மகிழ்ச்சியாக நான் அணியை தேர்வு செய்ய முடியாது. கடினமான முடிவாக இருந்தாலும் நான் இதை செய்தாக வேண்டும். 

முடிவு எடுப்பது எனது கடமை. மேலாளரின் முடிவுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது தவறான செய்தி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset