செய்திகள் விளையாட்டு
19 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை; ஜேக் பாலை திடீரென கன்னத்தில் அறைந்த மைக் டைசன்
நியூயார்க்:
மைக் டைசன் (58) தன்னை விட ஏறக்குறைய பாதி வயதே உள்ள ஜேக்பால் உடன் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகி உள்ளார்.
ஆனால் போட்டி முன்பே திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன் இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார்.
இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார்.
எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை.
சுமார் 19 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
இவரை அமெரிக்காவை சேர்ந்த ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை
நாக்-அவுட் முறையில் வெற்றி கண்டார்.
இந்த நிலையில் போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார்.
ஆனால் அவர் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 9:04 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 18, 2024, 9:00 am
தோற்றாலும் எனக்கு இது வெற்றியே: மைக் டைசன்
November 17, 2024, 9:00 am
குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி: ஜேக்பால் வெற்றி
November 17, 2024, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி அபாரம்
November 16, 2024, 1:46 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன: அன்பானந்தன்
November 16, 2024, 9:36 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2024, 2:56 pm
உலகத் தமிழ் வர்த்தகர்களிடையே ஒற்றுமை மிக அவசியம்: குணராஜ்
November 15, 2024, 9:28 am
கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்?: நிர்வாகி விளக்கம்
November 15, 2024, 9:23 am