நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் EZ-Link அட்டை விற்பனை மோசடி

சிங்கப்பூர்:

EZ-Link அட்டைகளின் விற்பனை மோசடிகள் சமூக ஊடகங்கள் வழி நடப்பதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அது பற்றிப் பதிவிட்டது.

'சிறிய கட்டணம் செலுத்தினால் போதும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அளவில்லாமல் பயன்படுத்தலாம்..'

இத்தகைய சலுகைகள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

பயனீட்டாளர்கள் விளம்பர இணையப்பக்கத்தைத் தட்டினால் அது அவர்களை மோசடி இணையப்பக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.

அங்கு வங்கி விவரங்களும் OTP எனும் ஒருமுறை கடவுச்சொல்லும் கேட்கப்படும்.

EZ-Link அட்டைகளுக்கான சலுகைகள் அனைத்தும் SimplyGo இணையப்பக்கத்திலும் SimplyGo, EZ-Link சமூக ஊடகப் பக்கங்களிலும் மட்டுமே இடம்பெறும் என்று ஆணையம் நினைவூட்டியது.

இலவசப் பயணங்களை வழங்கும் EZ-Link அட்டைகளின் விற்பனையை SimplyGo இதுவரை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே சந்தேகத்திற்குரிய இணையப்பக்கங்களைத் தட்ட வேண்டாம் என்று ஆணையம் ஆலோசனை வழங்கியது.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset