நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்

கான்பெரா:

ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் அத்தகைய மசோதாவைத் தாக்கல் செய்திருக்கும் முதல் நாடு ஆஸ்திரேலியா.

பெற்றோர் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்களில் இணையப் பாதுகாப்பும் ஒன்று என்று தொடர்பு அமைச்சர் Michelle Rowland தெரிவித்தார்.

மசோதா சட்டமானதும் வயதுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தச் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஓராண்டு அவகாசம் வழங்கப்படும்.

நடைமுறைப்படுத்தத் தவறும் நிறுவனங்கள் 44.3 மில்லியன் வெள்ளி வரை அபராதம் செலுத்த நேரிடலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவிற்குப் பெரிய அளவில் அரசியல் ஆதரவு இருக்கிறது.

16 வயதுக்குட்பட்டோரை ஏற்கனவே அவர்கள் உருவாக்கியுள்ள சமூகக் கட்டமைப்புகளிலிருந்து அந்தத் தடை தனிமைப்படுத்திவிடும் என்று கவனிப்பாளர்கள் அக்கறை தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset