செய்திகள் உலகம்
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் 27 வயதான இளம் பெண் கேரோலைன் லெவிட்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராக கேரோலைன் லெவிட்டைத் (Karoline Leavitt) தேர்ந்தெடுத்துள்ளார்.
திருவாட்டி லெவிட் புத்திசாலி, அவர் அமெரிக்கர்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதில் சிறந்து விளங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகத் டிரம்ப் சொன்னார். லெவிட்டுக்கு வயது 27.
அந்தப் பொறுப்பில் அமர்த்தப்படும் ஆக இளமையானவர் அவர்.
ஊடகக் கேள்விகளை அவர் சமாளிப்பார் என்று டிரம்ப் சொன்னார்.
திரு டிரம்ப்பின் பிரசாரத்தின்போது லெவிட் அவரது தேசியப் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றியதாக Fox News செய்தியிடம் கூறினார். கடந்த ஜூலையில் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது.
டிரம்ப் அதிபராகப் பணியாற்றியபோது லெவிட் அவரது துணைப் பத்திரிகைச் செயலாளராக இருந்தார்.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am