நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை பொதுத் தேர்தல்: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கட்சி ஆட்சி அமைக்கிறது 

கொழும்பு: 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் NPP, 2/3 சுயேற்சை பெரும்பான்மையுடன் 10ஆவது பாராளுமன்ற ஆட்சியை மிக பலம்பொருந்தியதாக அமைக்கிறது.

பிரதேச பேதம் இல்லாமல் இலங்கை தேசத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு என அனைத்து பிரதேச மக்களின் அமோகமாகன தெரிவுடன் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இவ்வாறான ஆட்சி அமைப்பது இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறை!

பல முன்னைய மந்திரிகளும் அமைச்சர்களும் மிகக்குறைந்த வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்கள். அவர்களது பாராளுமன்ற பிரவேசம் மக்களால் தடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் கேட்டுக்கொண்டது போல மக்கள் வாக்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள் என்று அவரது கட்சியினர் கூறிவருகின்றனர். 

 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 62%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset