
செய்திகள் கலைகள்
நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தின் முதல் காட்சிக்கு DSG சிறப்பு வருகை
ஷா ஆலம்:
நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படமான கங்குவா ரிலீஸ்க்கு முன்னரே பல தடைகளைச் சந்தித்த பிறகு இன்று உலகம் முழுவதும் கங்குவா படம் வெளியானது.
மலேசியாவில் அதன் FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி, மலேசிய சூர்யா ரசிகர் மன்றமும் DAK EVOLUTIONஉம் ஏற்பாட்டில் பிரபல வர்த்தகரும் நடிகருமான டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@DSG சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட DSG-யை சிறப்பித்தார்.
மலேசியாவில் கங்குவா முதல் நாள் முதல் காட்சி பட்டாசு வெடிகளுடனும் உறுமி தாளத்துடனும் ஷா ஆலமிலுள்ள டிஎஸ்ஆர் திரையரங்கில் திரையிடப்பட்டது.
காலை மணி 7.30 முதலே இப்படத்தின் கொண்டாட்டங்கள் ஆரம்பமானது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியை DAK EVOLUTION TRADING அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்திருந்தது.
க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் DSP இசையமைத்துள்ளார். இரண்டரை ஆண்டுகள் கழித்து சூர்யாவின் கங்குவா திரைப்படம் அவருக்கு நல்ல கம்பெக்காக அமையும் என நினைத்த மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் கார்த்தி என பல பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கங்குவா படத்தினைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலாக திரையரங்குகளில் திரண்டுள்ளதைக் காண முடிந்தது
கங்குவா படத்தின் முதல் பாதி சற்று தொய்வு ஏற்பட்டாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பான கதைகளத்துடன் பயணமாகிறது. மேலும், இறுதிகாட்சியில் ரசிகர்களுக்கு சிறப்பு தோற்றத்தில் தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் வருவது ரசிகர்களை ஆச்சிரியமடைய வைத்தது.
பாடல்கள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் கேட்கக்கூடிய அளவில் இருந்ததாக ரசிகர்கள் நம்பிக்கை ஊடகத்தாரிடம் பகிர்ந்து கொண்டனர்.
-மவித்திரன் & நந்தினி
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am