நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கம் ஏற்பாட்டில் மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது

கிள்ளான்: 

மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கம் ஏற்பாட்டில் மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா டிசம்பர் 21ஆம் தேதி TSR CONVENTION HALL இல் நடைபெறவுள்ளது

இந்த விருதளிப்பு விழாவிற்கு ம.இ.கா தேசிய தலைவர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் ஐயா தலைமையில் நடக்கவிருப்பதாக ஏற்பாட்டு குழு தலைவர் விக்னேஷ்வர் பாலசந்தர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் 

மலேசியாவிலிருந்து 52 இசை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை செய்வதற்கு மூல காரணமாக விளங்கியவர் மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் கலைத்தென்றல் பாலசந்தர் என்று அவர் சொன்னார். 

இந்த இயக்கம் 2011ஆம் ஆண்டு அமரர் திரு. பாலசந்தர் அப்பு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை, குறிப்பாக 10 ஆண்டுகள் மிக சிறப்பாக அவரின் தலைமைத்துவத்தின்  கீழ் இயக்கம் செயல்பட்டு  வந்த நிலையில்  அவரின் சிந்தனையில் இந்த விருது விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது தான் அதற்கான வாய்ப்பு கிட்டிபுள்ளது 

மேடை மெல்லிசை கலைஞர்கள், குறிப்பாக இசை கலைஞர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தற்போது வரை இசைகலைஞர்களுக்கு என தனி அங்கீகாரமும் விருதும் வழங்கப்பட்டதில்லை. அதனை களையும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது 

மலேசியாவிலுள்ள இந்திய இசைக்கலைஞர்களுக்காக ஓர் அங்கீகாரம் வழங்கப்டுவதோடு அவர்களின் திறமையைக் கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset