நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார் 

வாஷிங்டன்:

அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அடுத்த அதிபராகவிருப்பவரும் தற்போதைய அதிபரும் சந்திப்பது நிர்வாக மாற்றத்தைக் குறிக்கும் நீண்ட கால வழக்கம்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தம்மைச் சந்திக்க வரும்படி பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சந்திப்பில் நிர்வாக மாற்றம் சீராய் நடக்க இருவரும் உறுதியளித்தனர்.

தேசியப் பாதுகாப்பு, உள்நாட்டுக் கொள்கைகள் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியது.

அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதற்கு முன் பைடன், ஜூன் மாதம் நேரடி விவாதத்தின் போது டிரம்ப்பைச் சந்தித்தார்.

2020ஆம் ஆண்டு பைடன் தேர்தலில் வென்ற போது அவரை வெள்ளை மாளிகைக்கு அழைக்க அப்போது அதிபராக இருந்த டிரம்ப் மறுத்து விட்டார்.

அந்தத் தேர்தலில் தாம் தோற்கவில்லை என்று டிரம்ப் கூறிவந்தது அதற்குக் காரணம்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset