செய்திகள் உலகம்
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
கொழும்பு:
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 13,314 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், அனைத்து எழுது பொருட்களும் இன்று நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 49 வளாகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
22 தொகுதிகளுடன் தொடர்புடைய 25 மாவட்டச் செயலகங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஒத்திகை ஒன்றும் நடத்தப்படும்.
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இம் முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 6000 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 5:05 pm
எக்ஸ் தளத்திலிருந்து விலகிய 200 ஆண்டு பழமையான 'தி கார்டியன்’ நாளிதழ்
November 14, 2024, 2:05 pm
இலங்கை பொதுத் தேர்தல்: வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுக்க வேண்டாம்
November 14, 2024, 1:13 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 2017 பேருந்துகள் தயார்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm