நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தேவாலயத்தில் இருந்த பாதிரியார் கத்திக் குத்துக்கு ஆளானார்

சிங்கப்பூர்: 

புக்கிட் தீமா வட்டாரத்தில் இருக்கும் St Joseph's தேவாலயத்தில் பாதிரியார் இன்று மாலை கத்தியால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6.30 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் பெற்று தேவாலயத்துக்குச் சென்றதாகச் சிங்கப்பூரின் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தாக்கப்பட்ட பாதிரியார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சீரான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிரியாரைத் தாக்கியவர் 37 வயது சிங்கள இனத்தைச் சேர்ந்த 37 வயதுச் சிங்கப்பூரர் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

அவர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் தாம் கிறிஸ்தவர் என்று முன்பு அறிவித்ததாக அமைச்சர் சொன்னார்.
 

தாக்குதல் பயங்கரவாதச் செயல் அல்லவென்றும் சந்தேக நபர் தனித்துச் செயல்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது. அவருக்குப் போதைப்பொருள் புழங்கிய பின்னணி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாலை சுமார் 7.50 மணி நிலவரப்படி குறைந்தது 8 காவல்துறை வாகனங்களும் 20 அதிகாரிகளும் தேவாலயத்தில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிரியாரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் கூறினார்.
 
சிங்கப்பூரில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை, சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவத்தைப் பார்த்தவர்கள் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது சச்சரவு ஏற்பட்டதாகவும் பாதிரியாரின் வாய்ப்பகுதிக்கு அருகே அவர் குத்தப்பட்டதாகவும் கூறினர்.

பிள்ளைகள் நடத்திய கூட்டு ஆராதனையின்போது தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரார்த்தனையின்போது பாதிரியார் தாக்கப்பட்டது அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாகக் கதோலிக்க தலைமைப் பேராயர் கோ கூறினார். தாக்குதலை நேரில் பார்த்தப் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தைப் பற்றியும் அவர் அக்கறை தெரிவித்தார்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset