செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் இரண்டு உணவகங்கள் சுகாதாரமின்மையால் மூடப்பட்டன
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் இருக்கும் Banana Leaf Apolo, Shahi Briyani House Pte Ltd ஆகிய 2 உணவகங்களும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் 2 வாரம் மூடும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு உணவகங்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதனைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது இணையப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
இரு உணவகங்களும் நேற்று (8 நவம்பர்) முதல் வரும் 21ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
56 ரேஸ் கோர்ஸ் ரோட்டில் (Race Course Road) அமைந்துள்ள Banana Leaf Apolo உணவகத்திற்கு மொத்தம் 14 குற்றப்புள்ளிகள் கொடுக்கப்பட்டன.
அதற்கு 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
10 ரோவெல் ரோட்டில் (Rowell Road) அமைந்துள்ள Shahi Briyani House Pte Ltd உணவகத்திற்கு மொத்தம் 16 குற்றப்புள்ளிகள் கொடுக்கப்பட்டன.
அதற்கு 1,100 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
உணவைக் கையாளும் அனைவரும் மறுபடியும் பயிற்சிக்குச் சென்று தேர்ச்சியடைந்த பிறகே வேலைக்குத் திரும்பமுடியும் என்று அமைப்பு தெரிவித்தது.
சுத்தத்தைக் கட்டிக்காக்கும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உணவகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm