செய்திகள் உலகம்
நடுவானில் பறந்த ஹைனான் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ
ரோம்:
இத்தாலியின் ரோம் நகரிலிருந்து புறப்பட்ட ஹைனான் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றிக் கொண்டதால் அது மீண்டும் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
விமானிகள் முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்த எரிபொருளைக் கடலில் வீசினர்.
நிலவரத்தைக் கண்காணித்த உள்ளூர்க் கடற்படை வீரர்கள் தயார்நிலையில் இருந்தனர்.
249 பயணிகளும் 16 சிப்பந்திகளும் இருந்த விமானம் பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
விமானம் மீது ஒரு பறவை மோதியதால் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில் சீனாவுக்குச் செல்லவிருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹைனான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 1:13 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 2017 பேருந்துகள் தயார்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
November 12, 2024, 2:37 pm