செய்திகள் உலகம்
பாதிரியாரைக் கத்தியால் தாக்கிய ஆடவன் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்
சிங்கப்பூர்:
அப்பர் புக்கிட் தீமாவிலுள்ள St Joseph's தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக 37 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் (Basnayake Keith Spencer) நேற்று முன்தினம் (9 நவம்பர்) பிள்ளைகள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனையின்போது தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மாலை சுமார் 6.30 மணிக்கு அவர் மடக்கக்கூடிய கத்தியை வைத்து பாதிரியார் கிறிஸ்டஃபர் லீயின் (Christopher Lee) வாய்ப்பகுதியில் குத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவரிடம் மேலும் 4 ஆயுதங்கள் இருந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
ஸ்பென்சர் தம்மைக் கிறிஸ்துவர் என்று குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணையத்திடம் முன்பு கூறியிருந்தார்.
தாக்குதல் சமய அடிப்படையிலோ பயங்கரவாத அடிப்படையிலோ நடத்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.
ஆபத்தான ஆயுதத்துடன் ஒருவருக்குக் கடுமையான
காயங்களை விளைவிக்கும் குற்றத்துக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் மருத்துவமனையில் பாதிரியாருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவருடைய உடல்நிலை சீராய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 1:13 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 2017 பேருந்துகள் தயார்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
November 12, 2024, 2:37 pm